அப்போது நான்
அரைப்பத்துக்கும் பத்தாத வயது
பருவமும் பருகாத உருவம்
வெள்ளை மேகம் கூட
இல்லாத தெளிந்த உள்ளம்
நான் இப்போது நினைக்கிறேன்
அப்போது என் உள்ளம்
ஒரு துருவம்
ஏன்...?
உறங்கியது உருகி வருகிறதே...!
அதனால்...
உலகத்தையே
என் உள்ளபதிவேட்டில்
பதிய நினைத்த எனக்கு
அகரம் அல்லவா
ஆகாரமாய் அளிக்கப்பட்டது
அந்த "நேஸரியிலிருந்த" பூசாரி
ஏ போர் அப்பில் என்றது
என் தொப்பிளைக் கிள்ளியது.
நான் பாடசாலையில்
படித்த முதல் வாக்கியம்
"படம் பார்த்து கதை சொல்"
நான் புத்தகத்தை கடித்து
பதம் பார்த்த கதை இது
படம் பார்த்தேன்
கதை சொல்ல தெரியாத
பருவம் அது...
பட்டம் விடுவோம்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா
என்று பாடினேன்
இன்றும் அந்தப்பட்டம்
என் மனதில்
ஆடி ஆடி பறக்கிறதே...
நான்
மழலையில் பேசவில்லை
சிலேடையில் பேசினேன் - என்
சிரிப்புக்கு தெரியுமாம்
இப்போது சிரிக்கிறது
"நீ எங்கக்கா போல்
சிவப்பா இருக்கிறாயே...!"
"ஆனா உன் அண்ணாதான் கருப்பு..!"
"காக்கா கூட்டம் கருப்புதானே...!"
இது எங்களுக்கிடையில்
பன்மையல்ல இருமை - மற்றது
பெண் பால் ஒருமை
நான் கரம் தொட்டு பேசினேன்
ஆனால் அவள் அழகை
படம் பிடிக்கவில்லை
பொய்யில்லை - கையில்
கமரா இல்லை...
நான் இப்போதும்
பலகாரம் உண்ணும் போது
தமிழில் உள்ள பல லகாரங்கள்
படுத்திய பாடு
நாக்கு தூக்கு போட்ட செய்தி
அன்று ஆசிரியர்
வாழைப்பழத்தில் எங்கள் நாவை
வளைக்க முயன்றார்
என் நண்பன் ஒருவன்
உரித்து போட்ட தோலில் வழுக்கி
அவர் உடலை வளைதுக்கொண்டார்.
அன்று நாங்கள் சிரிக்கவில்லை...
அழுதோம்...
வகுப்பறையில் ஒரு நாள்
தமிழாசிரியர்
என்களிருவரை அழைத்தார்
"நீ குயிலை போல் பாட வேண்டும்"
"நீ மயிலை போல் ஆட வேண்டும்"
என்றார்.
நான் சொன்னேன்
"நீங்கள் ஆந்தையை போல் பார்க்க வேண்டும்"
எவரும் சிரிக்கவில்லை
அவரை தவிர...
என் அறிவு விரியும் போது
இந்த அகிலமே விரிந்தது
நான் பிறந்த போது
கருப்பையை உலகமாக கருதியவன்
பரந்த வெளியை கண்டு
பரவசப் பட்டேன்
ஊரை விட நாடு பெரிதென்று
நானறிந்தேன்
பின்னர் நாடும் உலகத்தின் ஓர்
உறுப்பென்று உணர்ந்தேன்.
கோள்கள், உடுக்கள், பால் வெளிகள்
இந்த பிரபஞ்சம் பற்றி
பின்னர் கற்றேன்
என் அறிவு விரிந்த போது
இந்த அகிலமே விரிந்தது
என் வாழ்கை வீதியில்
முதலில் பைசிக்கிள் ஓட்டத்தான்
கற்றுக்கொண்டேன்
பின்னர்தான் எல்லாம்....
நேரும் மறையும்
கவரும் என்று கற்று இருந்தேன்
பின்னர்தான்
அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்
பெண்களைக் கண்டால்
என் விழிகள்
இமைக்க மறுத்தன
கண்ணடித்தால்
வசை வருமென்றோ?
பெண்களைக் கண்டால்
என் விரல்கள்
யாழ் இன்றியே அசந்தனவே
இசை வருமென்றோ?
அன்றொரு நாள்
அரிசி அரைத்து வரும்படியான
அம்மாவின் கட்டளைக்கு
அடி பணிந்து சென்றேன்
இடம் தெரியாது, தேடினேன்
வீதியில் விசாரித்ததில்
எனக்கு முன்னரே தெரிந்த
வீடுதான் அது...
அது எனக்கு தெரிந்த
ஒருவரின் இல்லம்
அங்கே - ஒரு
பருவமாகாத மங்கை
அது அவர் தங்கை....
என்னை அவளுக்கும்
எனக்கு அவளையும்
நன்றாகவே தெரியும்
ஆம் அன்று நான்தான்
சென்றேன்...
அந்த வீட்டு
வாயில் கதவு கூட
என்னை வரவேற்க
வாய் மூடி மௌனமாய் நின்றது.
அதில் என் விரல்கள்
முத்தமிட்ட போதுதான்
என் விரல்களுக்கு கூட
இசை வருமென்று உணர்ந்தேன்
ஆம், அங்கே வந்து நின்றவள்
அவளேதான்...
வந்தவள் வாயில் இடுக்கில்
என் வதனம் கண்டு
"நானா இல்லையே..!"
"அது இல்லை...
இங்கா அரிசி இடிப்பது..?"
என் வார்த்தைகள் விரசவித்தன.
நான் அவளோடு
அதுதான் முதலும், இறுதியும்...
வாயில் கதவும் வாய் திறந்தது
அவளின் வாயும் கூட
"உள்ளுக்கு வங்க..."
நான் வெளியில் தாமதிக்கவில்லை
பாதங்கள் உள் நோக்கி பாய்ந்தன
வீட்டுக்கதவும் திறந்தது
முந்திய வார்த்தை திரும்பவும்
வெளி வந்தது
அப்போது அவள் மட்டும்தான்
அந்த வீட்டில்
அறிய அதிக நேரம் எடுக்கவில்லை
ஆசனம் கூட
அவளருகில் கிடைத்தது
அவள் ஆலையில்
அரிசியை இட்டுக் கொண்டிருந்தாள்
நான் அவளை என் கண்களில்
நிரப்பிக் கொண்டிருந்தேன்
உச்சந தலையிலிருந்து
உள்ளங் கால் வரை
மௌனமாக...
மிக மௌனமாக....
அப்போது
அவள் அம்மாவும், மாமாவும்
வந்தார்கள்....
என் மௌனத்தை கலைக்க அல்ல
என் விரதத்தை கலைக்க...
நிஜமாய்
அரிசியும் மாவாகியது
என் கனவுகளும் மாவாகியது.
மற்றொரு நாள்
நண்பன் ஒருவன் வீட்டுக்கு
நான் சென்று கொண்டிருந்தேன்
அப்போது என் பெயரை
தென்றல் கண்டு வந்து
தேனாய் பாய்ச்சியது
அது ஒரு பெண்மையின் குரல்
அவள் என்னோடு படித்தவள்
அருகே சென்றேன்
அவள் சில வார்த்தைகளால்
எனக்கு சிலை வைத்தாள்.
அவள் என்னிடம் எதிர் பார்த்தது
என் உள்ளத்தை அல்ல
ஒரு உதவியை மட்டும்...
மட்டுமேதான்.
இவைகள் நினைவிலிருந்த
சில நிஜங்கள்....
செவ்வாய், 20 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக