விலை போகாத
இந்த மாதுகள்
விலைக்கு போகிறார்கள்.
சனி, 31 ஜனவரி, 2009
விடுதலை
கால நீதி மன்றம்
தீர்ப்பு கூறுகிறது
அனைவரும் ஆயுட் கைதிகள்
காரணம்?
சிறையிலிருந்து தப்பி வந்தது
கற்பச் சிறை
நட்புச் சிறை
காதல் சிறை
குடும்ப சிறை
இறுதியில் கல்லறை
கடலிலிருந்து
சிப்பியிலிருந்து
விடுதி பெற்ற முத்து
மனிதர்களிடம் ஆயுள் முழுவதும்
சிறை வாசம் செய்வதை போல
விடுதலை பெறுகிறான்
என்பதை விட
மற்றொன்றில் சிறைப் படுகிறான்
இதுதான் உண்மை
ஆம், இங்கு
உடல்களை
சிறைக்குள் வைத்துக் கொண்டு
உயிர்களுக்கு விடுதலை
கொடுக்கிறார்கள்
நீதியை சிறையிலடைத்துவிட்டு
நீதி மன்றங்களை
நடத்துகிறார்கள்
படு கொலை செய்தவனுக்கு
விடுதலை
பார்த்திருந்தவனுக்கு
பத்து வருஷம்
ஏன்..?
அனைவரும் ஆயுட் கைதிகளே..!
சிறை சாலைக்குள்ளேதான்
சிலருக்கு சிறை வாசம்
"போனஸ்"
ஓ...! விடுதலை
இதற்கு அர்த்தம் தேடி
அலைகிறோம்
அனுபவித்தவன் யாரும்
இங்கில்லை
நாங்கள்
"ஸ்ட்ரைக்" பண்ண போகிறோம்
"விடுதலை"
அகராதியை விட்டு
விடுதலையாக வேண்டும்...
தீர்ப்பு கூறுகிறது
அனைவரும் ஆயுட் கைதிகள்
காரணம்?
சிறையிலிருந்து தப்பி வந்தது
கற்பச் சிறை
நட்புச் சிறை
காதல் சிறை
குடும்ப சிறை
இறுதியில் கல்லறை
கடலிலிருந்து
சிப்பியிலிருந்து
விடுதி பெற்ற முத்து
மனிதர்களிடம் ஆயுள் முழுவதும்
சிறை வாசம் செய்வதை போல
விடுதலை பெறுகிறான்
என்பதை விட
மற்றொன்றில் சிறைப் படுகிறான்
இதுதான் உண்மை
ஆம், இங்கு
உடல்களை
சிறைக்குள் வைத்துக் கொண்டு
உயிர்களுக்கு விடுதலை
கொடுக்கிறார்கள்
நீதியை சிறையிலடைத்துவிட்டு
நீதி மன்றங்களை
நடத்துகிறார்கள்
படு கொலை செய்தவனுக்கு
விடுதலை
பார்த்திருந்தவனுக்கு
பத்து வருஷம்
ஏன்..?
அனைவரும் ஆயுட் கைதிகளே..!
சிறை சாலைக்குள்ளேதான்
சிலருக்கு சிறை வாசம்
"போனஸ்"
ஓ...! விடுதலை
இதற்கு அர்த்தம் தேடி
அலைகிறோம்
அனுபவித்தவன் யாரும்
இங்கில்லை
நாங்கள்
"ஸ்ட்ரைக்" பண்ண போகிறோம்
"விடுதலை"
அகராதியை விட்டு
விடுதலையாக வேண்டும்...
லேபிள்கள்:
கவிதைகள்
வியாழன், 29 ஜனவரி, 2009
ஒரு நன்றியுள்ள ஜீவன்
பாருலகில்
பாவிகள் செய்யும் பாவத்தை
கழுவிச் செல்லும்
கடலலைகள்
கரையில்
பாவமே செய்யாத
பத்தினி போல்
சில தோணிகள்
கதிரவனின்
காலிக கதிர்களில்
முகம் கழுவும்
கடல் கரை மணல் பரப்புகள்
இந்த காட்சிகளை பார்த்து
நாணிக்க் கொண்டிருக்கும்
ஒரு கிழட்டுக் கிணறு
தூரத்தே....
கடல் கரையில்
மண் அள்ளுவதற்காக
ஒரு "டெக்டரில்"
சில மனிதர்களை
அள்ளிக் கொண்டுவந்த
படை வீரர் பதின்மர்
அதற்கொரு முரட்டு தலைவர்
வந்தவன்
கிணற்றின் மொட்டைத் தலையில்
சில செங்கற்களை வைத்துவிட்டு
ஒவ்வொன்றின் உயிரையும்
பறித்துக் கொண்டிருந்தான்
அவற்றின் சிவப்பு குருதி
பறந்து காற்றோடு கலக்கிறது
அந்த முரட்டுக்கும்
கிணற்றுக்கும் இடையில்
நிரந்தரமாய் தூங்கும் சிலர்
அது ஒரு சவக்காலை
எமன் வந்திருப்பதை
எள்ளளவும் நினைக்காத
நாயொன்று மெதுவாக...
மிக மெதுவாக - தனது
இறுதி நடையை ரசித்துக்கொண்டு
மெதுவாக...
அது...
பூமியை பார்க்கவில்லை
அதில் நிரந்தரமாகவே
தங்குவதை நினைத்தோ...!
சுற்றியிருப்பதை
சுவாரஸ்யமாக...
அதன் இறுதி நடை
எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது
மெதுவாக, மிக மெதுவாக....
தான் படைக்கப் பட்டது
எந்த இடத்து மண்ணென்று
முகர்ந்து கொண்டிருக்கிறது
அங்கயே தனது சமாதியை
அமைதுக்கொள்ளவோ...?
இந்த - இலங்கை மண்ணில்
சமாதானம் எங்கே
மனக்கிறதேன்றோ?
அதன்
பூலோக வாழ்கையின்
எஞ்சிய காற்றும் சுவாசிக்கபடுகிறது
அப்போது
இவனின் துப்பாக்கி முனை
அந்த உயிரை குடிக்க
உற்றுப்பார்க்கிறது
அவனின் விரல்கள வில்லை
அமிழ்த ஆயத்தமாகிறது
அடுத்த வினாடி
படார்....
அதன் வயிற்றில்
செவ்விரத்தை பூத்திருந்தது
அனாலும் - அதன் உயிர்
உடனே செல்லவில்லை
நன்றி சொல்லவில்லை
என்பதனால்
தன்னுயிர் பறித்தவன்
வதனம் திரும்பியது - அதன்
முகத்தில் நன்றி ததும்பியது
அது
நன்றியுள்ள ஜீவன்
அந்த நன்றி எதற்காக?
மானிட ஜென்மத்தின்
மத்தியில் தன்னையும்
துயில வைத்ததற்காக
எமனுக்கு தன்னை
அடையாளம் காட்டிக் கொடுத்ததற்காக
மாண்புள்ள மனிதர்களை
மாக்கும் கருவியால்
தன்னையும் மாய்த்ததற்காக
அதன் உயிர்
இன்னும் செல்லவில்லை
அவனும் அதனருகே செல்லவில்லை
வேறிருவர்
அதனருகில் சென்றனர்
ஒருவனின் துப்பாக்கி
ஒரு குண்டை துப்பிவிட்டது
அதனை அந்த நன்றியுள்ள ஜீவன்
காதால் பெற்றுக்கொண்டது
எஞ்சியிருந்த உயிரும்
இப்போது எஞ்சவில்லை
இதட்கிலையில்
மற்றவனின் துப்பாக்கியில்
தூங்கி கொண்டிருந்த குண்டும்
அதனை முத்தமிட விரைந்தது
"டெக்டரில்" மண்
அள்ளப் பட்டுக்கொண்டிருந்தது
அதன் மேலும்
இரு வாளி கொட்டப்பட்டது
கல்லறை வாசகம் இல்லாத
ஒரு நன்றியுள்ள ஜீவனின்
சமாதி அங்கே...
பாவிகள் செய்யும் பாவத்தை
கழுவிச் செல்லும்
கடலலைகள்
கரையில்
பாவமே செய்யாத
பத்தினி போல்
சில தோணிகள்
கதிரவனின்
காலிக கதிர்களில்
முகம் கழுவும்
கடல் கரை மணல் பரப்புகள்
இந்த காட்சிகளை பார்த்து
நாணிக்க் கொண்டிருக்கும்
ஒரு கிழட்டுக் கிணறு
தூரத்தே....
கடல் கரையில்
மண் அள்ளுவதற்காக
ஒரு "டெக்டரில்"
சில மனிதர்களை
அள்ளிக் கொண்டுவந்த
படை வீரர் பதின்மர்
அதற்கொரு முரட்டு தலைவர்
வந்தவன்
கிணற்றின் மொட்டைத் தலையில்
சில செங்கற்களை வைத்துவிட்டு
ஒவ்வொன்றின் உயிரையும்
பறித்துக் கொண்டிருந்தான்
அவற்றின் சிவப்பு குருதி
பறந்து காற்றோடு கலக்கிறது
அந்த முரட்டுக்கும்
கிணற்றுக்கும் இடையில்
நிரந்தரமாய் தூங்கும் சிலர்
அது ஒரு சவக்காலை
எமன் வந்திருப்பதை
எள்ளளவும் நினைக்காத
நாயொன்று மெதுவாக...
மிக மெதுவாக - தனது
இறுதி நடையை ரசித்துக்கொண்டு
மெதுவாக...
அது...
பூமியை பார்க்கவில்லை
அதில் நிரந்தரமாகவே
தங்குவதை நினைத்தோ...!
சுற்றியிருப்பதை
சுவாரஸ்யமாக...
அதன் இறுதி நடை
எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது
மெதுவாக, மிக மெதுவாக....
தான் படைக்கப் பட்டது
எந்த இடத்து மண்ணென்று
முகர்ந்து கொண்டிருக்கிறது
அங்கயே தனது சமாதியை
அமைதுக்கொள்ளவோ...?
இந்த - இலங்கை மண்ணில்
சமாதானம் எங்கே
மனக்கிறதேன்றோ?
அதன்
பூலோக வாழ்கையின்
எஞ்சிய காற்றும் சுவாசிக்கபடுகிறது
அப்போது
இவனின் துப்பாக்கி முனை
அந்த உயிரை குடிக்க
உற்றுப்பார்க்கிறது
அவனின் விரல்கள வில்லை
அமிழ்த ஆயத்தமாகிறது
அடுத்த வினாடி
படார்....
அதன் வயிற்றில்
செவ்விரத்தை பூத்திருந்தது
அனாலும் - அதன் உயிர்
உடனே செல்லவில்லை
நன்றி சொல்லவில்லை
என்பதனால்
தன்னுயிர் பறித்தவன்
வதனம் திரும்பியது - அதன்
முகத்தில் நன்றி ததும்பியது
அது
நன்றியுள்ள ஜீவன்
அந்த நன்றி எதற்காக?
மானிட ஜென்மத்தின்
மத்தியில் தன்னையும்
துயில வைத்ததற்காக
எமனுக்கு தன்னை
அடையாளம் காட்டிக் கொடுத்ததற்காக
மாண்புள்ள மனிதர்களை
மாக்கும் கருவியால்
தன்னையும் மாய்த்ததற்காக
அதன் உயிர்
இன்னும் செல்லவில்லை
அவனும் அதனருகே செல்லவில்லை
வேறிருவர்
அதனருகில் சென்றனர்
ஒருவனின் துப்பாக்கி
ஒரு குண்டை துப்பிவிட்டது
அதனை அந்த நன்றியுள்ள ஜீவன்
காதால் பெற்றுக்கொண்டது
எஞ்சியிருந்த உயிரும்
இப்போது எஞ்சவில்லை
இதட்கிலையில்
மற்றவனின் துப்பாக்கியில்
தூங்கி கொண்டிருந்த குண்டும்
அதனை முத்தமிட விரைந்தது
"டெக்டரில்" மண்
அள்ளப் பட்டுக்கொண்டிருந்தது
அதன் மேலும்
இரு வாளி கொட்டப்பட்டது
கல்லறை வாசகம் இல்லாத
ஒரு நன்றியுள்ள ஜீவனின்
சமாதி அங்கே...
லேபிள்கள்:
கவிதைகள்
வியாழன், 22 ஜனவரி, 2009
ஒரு தவறு செய்த நாள்
- 25042008
ஒரு தவறு செய்ததால்தான்
உலமென்பதே உருவானது
தவறாய் வந்ததே
தவறாய் போனது
இறந்த நாளில்
நிகழ்ந்த தவறுக்கு - சிலர்
விழாக் கொண்டாடுகிறார்கள்
பலர் - தாம்
பிறந்ததையே மறந்து
விளையாடுகிறார்கள்
எங்களுக்கு
எதற்கும் கவலையில்லை
குருதியால் கோலமிட்டு
அங்கங்களால் அலங்கரித்து
பிணங்க்களை வெட்டி
பிறந்த நாள்
கொண்டாடப்போகிறோம்
இறந்த நாள் கொண்டாட
தாண்டிச் சென்ற நாட்களை
தோண்டிப் பார்க்கிறோம்
அது -
பிண்டங்கள் பிறந்த நாள்
தனக்காக ஒரு தடவை
தவறாக சிந்திக்கிறேன்
மாள்வதும் தவறல்ல
வாழ்வதும் தவறல்ல
பிறந்ததைத் தவிர.
ஒரு தவறு செய்ததால்தான்
உலமென்பதே உருவானது
தவறாய் வந்ததே
தவறாய் போனது
இறந்த நாளில்
நிகழ்ந்த தவறுக்கு - சிலர்
விழாக் கொண்டாடுகிறார்கள்
பலர் - தாம்
பிறந்ததையே மறந்து
விளையாடுகிறார்கள்
எங்களுக்கு
எதற்கும் கவலையில்லை
குருதியால் கோலமிட்டு
அங்கங்களால் அலங்கரித்து
பிணங்க்களை வெட்டி
பிறந்த நாள்
கொண்டாடப்போகிறோம்
இறந்த நாள் கொண்டாட
தாண்டிச் சென்ற நாட்களை
தோண்டிப் பார்க்கிறோம்
அது -
பிண்டங்கள் பிறந்த நாள்
தனக்காக ஒரு தடவை
தவறாக சிந்திக்கிறேன்
மாள்வதும் தவறல்ல
வாழ்வதும் தவறல்ல
பிறந்ததைத் தவிர.
லேபிள்கள்:
கவிதைகள்
பாலை வனத்து "ஸம் ஸம்"
நீ - அன்று
அரபு மண்ணிலே
அவதரித்தாய்
ஒரு பாலகனின்
பாதம் பட்டதால் - ஒரு
பாலை நிலத்திலே
பரிணமித்தாய்.
ஒரு மலர் கூட பூக்காத
அந்த வனத்திலே - என்றும்
வாடாத மலராய்
வந்து நின்றாய்
அவள் - அந்த
பாலகனின் தாகத்துக்கு - தன்
மார்பகத்தில் பால் இன்றியா
தாகம் தீர்க்க
தண்ணீர் தேடினாள்?
அவள் - அந்த
ஸபா - மர்வா மலைகளுக்கிடையே
அலைந்த போது
சிந்திய கண்ணீரையாவது
சேமித்திருக்க கூடாதா?
இதயக்கிணற்றில்
நீர் இன்றியா
தேடி அலைந்தாள்?
இல்லை...
இதயத்தில் ஈரம்
இருந்தால்தான்
அந்த
முல்லைக்கு அமுதூட்ட
முளைத்த
முளையல்லவா நீ..?
அன்று
பிஞ்சு குழந்தையின்
பாதம் தொட்டதால் - உன்
மொட்டு விரிந்தது
ஒரு சொட்டு தாகத்துக்காய்
பாலை வனத்திலே - ஒரு
பொட்டு வைத்தாட் போல்
என்றும் பட்டுவிடாமல்
நிலை பெற்றுவிட்டாய்
எந்தவொரு மேகமும்
எந்தவொரு நதியும்
குறிப்பிட்ட இடங்களைத்தான்
குளிர வைக்கும்
ஆனால் - நீ
நீராகிச சென்று
நனைக்காத
நாடுண்டா சொல்?
எண்ணெய்க் கிணறுகளின்
சாம்ராஜியத்தில் - ஒரு
தண்ணீர்க் கிணறாய் நீ
தங்கியிருப்பதன் ரகசியம் என்ன?
அரபு மண்ணிலே
அவதரித்தாய்
ஒரு பாலகனின்
பாதம் பட்டதால் - ஒரு
பாலை நிலத்திலே
பரிணமித்தாய்.
ஒரு மலர் கூட பூக்காத
அந்த வனத்திலே - என்றும்
வாடாத மலராய்
வந்து நின்றாய்
அவள் - அந்த
பாலகனின் தாகத்துக்கு - தன்
மார்பகத்தில் பால் இன்றியா
தாகம் தீர்க்க
தண்ணீர் தேடினாள்?
அவள் - அந்த
ஸபா - மர்வா மலைகளுக்கிடையே
அலைந்த போது
சிந்திய கண்ணீரையாவது
சேமித்திருக்க கூடாதா?
இதயக்கிணற்றில்
நீர் இன்றியா
தேடி அலைந்தாள்?
இல்லை...
இதயத்தில் ஈரம்
இருந்தால்தான்
அந்த
முல்லைக்கு அமுதூட்ட
முளைத்த
முளையல்லவா நீ..?
அன்று
பிஞ்சு குழந்தையின்
பாதம் தொட்டதால் - உன்
மொட்டு விரிந்தது
ஒரு சொட்டு தாகத்துக்காய்
பாலை வனத்திலே - ஒரு
பொட்டு வைத்தாட் போல்
என்றும் பட்டுவிடாமல்
நிலை பெற்றுவிட்டாய்
எந்தவொரு மேகமும்
எந்தவொரு நதியும்
குறிப்பிட்ட இடங்களைத்தான்
குளிர வைக்கும்
ஆனால் - நீ
நீராகிச சென்று
நனைக்காத
நாடுண்டா சொல்?
எண்ணெய்க் கிணறுகளின்
சாம்ராஜியத்தில் - ஒரு
தண்ணீர்க் கிணறாய் நீ
தங்கியிருப்பதன் ரகசியம் என்ன?
லேபிள்கள்:
கவிதைகள்
செவ்வாய், 20 ஜனவரி, 2009
பசுமையான பதிவுகள்
அப்போது நான்
அரைப்பத்துக்கும் பத்தாத வயது
பருவமும் பருகாத உருவம்
வெள்ளை மேகம் கூட
இல்லாத தெளிந்த உள்ளம்
நான் இப்போது நினைக்கிறேன்
அப்போது என் உள்ளம்
ஒரு துருவம்
ஏன்...?
உறங்கியது உருகி வருகிறதே...!
அதனால்...
உலகத்தையே
என் உள்ளபதிவேட்டில்
பதிய நினைத்த எனக்கு
அகரம் அல்லவா
ஆகாரமாய் அளிக்கப்பட்டது
அந்த "நேஸரியிலிருந்த" பூசாரி
ஏ போர் அப்பில் என்றது
என் தொப்பிளைக் கிள்ளியது.
நான் பாடசாலையில்
படித்த முதல் வாக்கியம்
"படம் பார்த்து கதை சொல்"
நான் புத்தகத்தை கடித்து
பதம் பார்த்த கதை இது
படம் பார்த்தேன்
கதை சொல்ல தெரியாத
பருவம் அது...
பட்டம் விடுவோம்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா
என்று பாடினேன்
இன்றும் அந்தப்பட்டம்
என் மனதில்
ஆடி ஆடி பறக்கிறதே...
நான்
மழலையில் பேசவில்லை
சிலேடையில் பேசினேன் - என்
சிரிப்புக்கு தெரியுமாம்
இப்போது சிரிக்கிறது
"நீ எங்கக்கா போல்
சிவப்பா இருக்கிறாயே...!"
"ஆனா உன் அண்ணாதான் கருப்பு..!"
"காக்கா கூட்டம் கருப்புதானே...!"
இது எங்களுக்கிடையில்
பன்மையல்ல இருமை - மற்றது
பெண் பால் ஒருமை
நான் கரம் தொட்டு பேசினேன்
ஆனால் அவள் அழகை
படம் பிடிக்கவில்லை
பொய்யில்லை - கையில்
கமரா இல்லை...
நான் இப்போதும்
பலகாரம் உண்ணும் போது
தமிழில் உள்ள பல லகாரங்கள்
படுத்திய பாடு
நாக்கு தூக்கு போட்ட செய்தி
அன்று ஆசிரியர்
வாழைப்பழத்தில் எங்கள் நாவை
வளைக்க முயன்றார்
என் நண்பன் ஒருவன்
உரித்து போட்ட தோலில் வழுக்கி
அவர் உடலை வளைதுக்கொண்டார்.
அன்று நாங்கள் சிரிக்கவில்லை...
அழுதோம்...
வகுப்பறையில் ஒரு நாள்
தமிழாசிரியர்
என்களிருவரை அழைத்தார்
"நீ குயிலை போல் பாட வேண்டும்"
"நீ மயிலை போல் ஆட வேண்டும்"
என்றார்.
நான் சொன்னேன்
"நீங்கள் ஆந்தையை போல் பார்க்க வேண்டும்"
எவரும் சிரிக்கவில்லை
அவரை தவிர...
என் அறிவு விரியும் போது
இந்த அகிலமே விரிந்தது
நான் பிறந்த போது
கருப்பையை உலகமாக கருதியவன்
பரந்த வெளியை கண்டு
பரவசப் பட்டேன்
ஊரை விட நாடு பெரிதென்று
நானறிந்தேன்
பின்னர் நாடும் உலகத்தின் ஓர்
உறுப்பென்று உணர்ந்தேன்.
கோள்கள், உடுக்கள், பால் வெளிகள்
இந்த பிரபஞ்சம் பற்றி
பின்னர் கற்றேன்
என் அறிவு விரிந்த போது
இந்த அகிலமே விரிந்தது
என் வாழ்கை வீதியில்
முதலில் பைசிக்கிள் ஓட்டத்தான்
கற்றுக்கொண்டேன்
பின்னர்தான் எல்லாம்....
நேரும் மறையும்
கவரும் என்று கற்று இருந்தேன்
பின்னர்தான்
அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்
பெண்களைக் கண்டால்
என் விழிகள்
இமைக்க மறுத்தன
கண்ணடித்தால்
வசை வருமென்றோ?
பெண்களைக் கண்டால்
என் விரல்கள்
யாழ் இன்றியே அசந்தனவே
இசை வருமென்றோ?
அன்றொரு நாள்
அரிசி அரைத்து வரும்படியான
அம்மாவின் கட்டளைக்கு
அடி பணிந்து சென்றேன்
இடம் தெரியாது, தேடினேன்
வீதியில் விசாரித்ததில்
எனக்கு முன்னரே தெரிந்த
வீடுதான் அது...
அது எனக்கு தெரிந்த
ஒருவரின் இல்லம்
அங்கே - ஒரு
பருவமாகாத மங்கை
அது அவர் தங்கை....
என்னை அவளுக்கும்
எனக்கு அவளையும்
நன்றாகவே தெரியும்
ஆம் அன்று நான்தான்
சென்றேன்...
அந்த வீட்டு
வாயில் கதவு கூட
என்னை வரவேற்க
வாய் மூடி மௌனமாய் நின்றது.
அதில் என் விரல்கள்
முத்தமிட்ட போதுதான்
என் விரல்களுக்கு கூட
இசை வருமென்று உணர்ந்தேன்
ஆம், அங்கே வந்து நின்றவள்
அவளேதான்...
வந்தவள் வாயில் இடுக்கில்
என் வதனம் கண்டு
"நானா இல்லையே..!"
"அது இல்லை...
இங்கா அரிசி இடிப்பது..?"
என் வார்த்தைகள் விரசவித்தன.
நான் அவளோடு
அதுதான் முதலும், இறுதியும்...
வாயில் கதவும் வாய் திறந்தது
அவளின் வாயும் கூட
"உள்ளுக்கு வங்க..."
நான் வெளியில் தாமதிக்கவில்லை
பாதங்கள் உள் நோக்கி பாய்ந்தன
வீட்டுக்கதவும் திறந்தது
முந்திய வார்த்தை திரும்பவும்
வெளி வந்தது
அப்போது அவள் மட்டும்தான்
அந்த வீட்டில்
அறிய அதிக நேரம் எடுக்கவில்லை
ஆசனம் கூட
அவளருகில் கிடைத்தது
அவள் ஆலையில்
அரிசியை இட்டுக் கொண்டிருந்தாள்
நான் அவளை என் கண்களில்
நிரப்பிக் கொண்டிருந்தேன்
உச்சந தலையிலிருந்து
உள்ளங் கால் வரை
மௌனமாக...
மிக மௌனமாக....
அப்போது
அவள் அம்மாவும், மாமாவும்
வந்தார்கள்....
என் மௌனத்தை கலைக்க அல்ல
என் விரதத்தை கலைக்க...
நிஜமாய்
அரிசியும் மாவாகியது
என் கனவுகளும் மாவாகியது.
மற்றொரு நாள்
நண்பன் ஒருவன் வீட்டுக்கு
நான் சென்று கொண்டிருந்தேன்
அப்போது என் பெயரை
தென்றல் கண்டு வந்து
தேனாய் பாய்ச்சியது
அது ஒரு பெண்மையின் குரல்
அவள் என்னோடு படித்தவள்
அருகே சென்றேன்
அவள் சில வார்த்தைகளால்
எனக்கு சிலை வைத்தாள்.
அவள் என்னிடம் எதிர் பார்த்தது
என் உள்ளத்தை அல்ல
ஒரு உதவியை மட்டும்...
மட்டுமேதான்.
இவைகள் நினைவிலிருந்த
சில நிஜங்கள்....
அரைப்பத்துக்கும் பத்தாத வயது
பருவமும் பருகாத உருவம்
வெள்ளை மேகம் கூட
இல்லாத தெளிந்த உள்ளம்
நான் இப்போது நினைக்கிறேன்
அப்போது என் உள்ளம்
ஒரு துருவம்
ஏன்...?
உறங்கியது உருகி வருகிறதே...!
அதனால்...
உலகத்தையே
என் உள்ளபதிவேட்டில்
பதிய நினைத்த எனக்கு
அகரம் அல்லவா
ஆகாரமாய் அளிக்கப்பட்டது
அந்த "நேஸரியிலிருந்த" பூசாரி
ஏ போர் அப்பில் என்றது
என் தொப்பிளைக் கிள்ளியது.
நான் பாடசாலையில்
படித்த முதல் வாக்கியம்
"படம் பார்த்து கதை சொல்"
நான் புத்தகத்தை கடித்து
பதம் பார்த்த கதை இது
படம் பார்த்தேன்
கதை சொல்ல தெரியாத
பருவம் அது...
பட்டம் விடுவோம்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா
என்று பாடினேன்
இன்றும் அந்தப்பட்டம்
என் மனதில்
ஆடி ஆடி பறக்கிறதே...
நான்
மழலையில் பேசவில்லை
சிலேடையில் பேசினேன் - என்
சிரிப்புக்கு தெரியுமாம்
இப்போது சிரிக்கிறது
"நீ எங்கக்கா போல்
சிவப்பா இருக்கிறாயே...!"
"ஆனா உன் அண்ணாதான் கருப்பு..!"
"காக்கா கூட்டம் கருப்புதானே...!"
இது எங்களுக்கிடையில்
பன்மையல்ல இருமை - மற்றது
பெண் பால் ஒருமை
நான் கரம் தொட்டு பேசினேன்
ஆனால் அவள் அழகை
படம் பிடிக்கவில்லை
பொய்யில்லை - கையில்
கமரா இல்லை...
நான் இப்போதும்
பலகாரம் உண்ணும் போது
தமிழில் உள்ள பல லகாரங்கள்
படுத்திய பாடு
நாக்கு தூக்கு போட்ட செய்தி
அன்று ஆசிரியர்
வாழைப்பழத்தில் எங்கள் நாவை
வளைக்க முயன்றார்
என் நண்பன் ஒருவன்
உரித்து போட்ட தோலில் வழுக்கி
அவர் உடலை வளைதுக்கொண்டார்.
அன்று நாங்கள் சிரிக்கவில்லை...
அழுதோம்...
வகுப்பறையில் ஒரு நாள்
தமிழாசிரியர்
என்களிருவரை அழைத்தார்
"நீ குயிலை போல் பாட வேண்டும்"
"நீ மயிலை போல் ஆட வேண்டும்"
என்றார்.
நான் சொன்னேன்
"நீங்கள் ஆந்தையை போல் பார்க்க வேண்டும்"
எவரும் சிரிக்கவில்லை
அவரை தவிர...
என் அறிவு விரியும் போது
இந்த அகிலமே விரிந்தது
நான் பிறந்த போது
கருப்பையை உலகமாக கருதியவன்
பரந்த வெளியை கண்டு
பரவசப் பட்டேன்
ஊரை விட நாடு பெரிதென்று
நானறிந்தேன்
பின்னர் நாடும் உலகத்தின் ஓர்
உறுப்பென்று உணர்ந்தேன்.
கோள்கள், உடுக்கள், பால் வெளிகள்
இந்த பிரபஞ்சம் பற்றி
பின்னர் கற்றேன்
என் அறிவு விரிந்த போது
இந்த அகிலமே விரிந்தது
என் வாழ்கை வீதியில்
முதலில் பைசிக்கிள் ஓட்டத்தான்
கற்றுக்கொண்டேன்
பின்னர்தான் எல்லாம்....
நேரும் மறையும்
கவரும் என்று கற்று இருந்தேன்
பின்னர்தான்
அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்
பெண்களைக் கண்டால்
என் விழிகள்
இமைக்க மறுத்தன
கண்ணடித்தால்
வசை வருமென்றோ?
பெண்களைக் கண்டால்
என் விரல்கள்
யாழ் இன்றியே அசந்தனவே
இசை வருமென்றோ?
அன்றொரு நாள்
அரிசி அரைத்து வரும்படியான
அம்மாவின் கட்டளைக்கு
அடி பணிந்து சென்றேன்
இடம் தெரியாது, தேடினேன்
வீதியில் விசாரித்ததில்
எனக்கு முன்னரே தெரிந்த
வீடுதான் அது...
அது எனக்கு தெரிந்த
ஒருவரின் இல்லம்
அங்கே - ஒரு
பருவமாகாத மங்கை
அது அவர் தங்கை....
என்னை அவளுக்கும்
எனக்கு அவளையும்
நன்றாகவே தெரியும்
ஆம் அன்று நான்தான்
சென்றேன்...
அந்த வீட்டு
வாயில் கதவு கூட
என்னை வரவேற்க
வாய் மூடி மௌனமாய் நின்றது.
அதில் என் விரல்கள்
முத்தமிட்ட போதுதான்
என் விரல்களுக்கு கூட
இசை வருமென்று உணர்ந்தேன்
ஆம், அங்கே வந்து நின்றவள்
அவளேதான்...
வந்தவள் வாயில் இடுக்கில்
என் வதனம் கண்டு
"நானா இல்லையே..!"
"அது இல்லை...
இங்கா அரிசி இடிப்பது..?"
என் வார்த்தைகள் விரசவித்தன.
நான் அவளோடு
அதுதான் முதலும், இறுதியும்...
வாயில் கதவும் வாய் திறந்தது
அவளின் வாயும் கூட
"உள்ளுக்கு வங்க..."
நான் வெளியில் தாமதிக்கவில்லை
பாதங்கள் உள் நோக்கி பாய்ந்தன
வீட்டுக்கதவும் திறந்தது
முந்திய வார்த்தை திரும்பவும்
வெளி வந்தது
அப்போது அவள் மட்டும்தான்
அந்த வீட்டில்
அறிய அதிக நேரம் எடுக்கவில்லை
ஆசனம் கூட
அவளருகில் கிடைத்தது
அவள் ஆலையில்
அரிசியை இட்டுக் கொண்டிருந்தாள்
நான் அவளை என் கண்களில்
நிரப்பிக் கொண்டிருந்தேன்
உச்சந தலையிலிருந்து
உள்ளங் கால் வரை
மௌனமாக...
மிக மௌனமாக....
அப்போது
அவள் அம்மாவும், மாமாவும்
வந்தார்கள்....
என் மௌனத்தை கலைக்க அல்ல
என் விரதத்தை கலைக்க...
நிஜமாய்
அரிசியும் மாவாகியது
என் கனவுகளும் மாவாகியது.
மற்றொரு நாள்
நண்பன் ஒருவன் வீட்டுக்கு
நான் சென்று கொண்டிருந்தேன்
அப்போது என் பெயரை
தென்றல் கண்டு வந்து
தேனாய் பாய்ச்சியது
அது ஒரு பெண்மையின் குரல்
அவள் என்னோடு படித்தவள்
அருகே சென்றேன்
அவள் சில வார்த்தைகளால்
எனக்கு சிலை வைத்தாள்.
அவள் என்னிடம் எதிர் பார்த்தது
என் உள்ளத்தை அல்ல
ஒரு உதவியை மட்டும்...
மட்டுமேதான்.
இவைகள் நினைவிலிருந்த
சில நிஜங்கள்....
லேபிள்கள்:
கவிதைகள்
நான் சொல்கிறேன்
ஓரிடத்திலிருந்து கொண்டு
உலகை சுற்றி வந்து
கருத்துகளாக நானாகி
என்னையே கரைத்து
பேனாவிநூடு நுழைந்து
காகிதத்திலே படர்கிறேன்
உலகம் சுற்றுவதைவிட
என் தலை சுற்றுவதே அதிகம்
எண்ணங்கள் என்னை
பின்னி எடுக்கும் பிரளயத்தின் போது
எனதின் எண்ணங்களை
கவிதை விளக்கிலே
எண்ணையாக ஊற்றுகிறேன்
நானே திரியாகியும் எரிகிறேன்
அந்த வெளிச்சத்தில்
என்னை பாருங்கள்
என் உள்ளதை ஒப்பிட
உலகத்தில் உள்ளதை எல்லாம்
உருவிப் பார்த்தேன்
முடியவில்லை
நானே எரிந்து
நீராகி கடல் நீரிலே கரைகிறேன்
அப்போதுதான் என் உள்ளத்தை
அறிந்து கொள்கிறேன்
என்ன அலைகள் எழுந்து
கரை வரை வந்து
வெளியே சொல்லமுடியாமல்
மெல்லப்படுகிறது...
இதனால்,
என் உள்ளத்தை திறந்து
உணர்வுகள் உருவாக்கும் - கவிதைகள்
உயிருள்ளவைகள்...
உலகை சுற்றி வந்து
கருத்துகளாக நானாகி
என்னையே கரைத்து
பேனாவிநூடு நுழைந்து
காகிதத்திலே படர்கிறேன்
உலகம் சுற்றுவதைவிட
என் தலை சுற்றுவதே அதிகம்
எண்ணங்கள் என்னை
பின்னி எடுக்கும் பிரளயத்தின் போது
எனதின் எண்ணங்களை
கவிதை விளக்கிலே
எண்ணையாக ஊற்றுகிறேன்
நானே திரியாகியும் எரிகிறேன்
அந்த வெளிச்சத்தில்
என்னை பாருங்கள்
என் உள்ளதை ஒப்பிட
உலகத்தில் உள்ளதை எல்லாம்
உருவிப் பார்த்தேன்
முடியவில்லை
நானே எரிந்து
நீராகி கடல் நீரிலே கரைகிறேன்
அப்போதுதான் என் உள்ளத்தை
அறிந்து கொள்கிறேன்
என்ன அலைகள் எழுந்து
கரை வரை வந்து
வெளியே சொல்லமுடியாமல்
மெல்லப்படுகிறது...
இதனால்,
என் உள்ளத்தை திறந்து
உணர்வுகள் உருவாக்கும் - கவிதைகள்
உயிருள்ளவைகள்...
லேபிள்கள்:
கவிதைகள்
திங்கள், 19 ஜனவரி, 2009
நான் யார்?
நான் யார்?
பல தசாப்தங்களை
பதில் தெரியாமலே கடந்துவிட்டேன்.
அனைவரையும் போல்
அழுதுகொண்டே பிறந்தவன் என்றாலும்
இன்றும் சிரிப்பை
வாடகைக்கே வைத்துருக்கிறேன்.
எங்கோ பிறேந்தேன்
எங்கோ வாழ்கிறேன்...
எத்தனையோ உறவுகள்
எத்தனையோ பிரிவுகள்...
பல நூறு தோல்விகள்
ஒரு சில வெற்றிகள்...
பல தசாப்தங்களை
பதில் தெரியாமலே கடந்துவிட்டேன்.
அனைவரையும் போல்
அழுதுகொண்டே பிறந்தவன் என்றாலும்
இன்றும் சிரிப்பை
வாடகைக்கே வைத்துருக்கிறேன்.
எங்கோ பிறேந்தேன்
எங்கோ வாழ்கிறேன்...
எத்தனையோ உறவுகள்
எத்தனையோ பிரிவுகள்...
பல நூறு தோல்விகள்
ஒரு சில வெற்றிகள்...
ஏன் பிறந்தேன்?
எதற்காய் வாழ்கிறேன்?
எங்கே செல்கிறேன்?
பதில்களை தேடி - என்
வாழ்க்கைப் பயணம்
தொடர்கிறது...
லேபிள்கள்:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)