திங்கள், 19 ஜனவரி, 2009

நான் யார்?

நான் யார்?
பல தசாப்தங்களை
பதில் தெரியாமலே கடந்துவிட்டேன்.

அனைவரையும் போல்
அழுதுகொண்டே பிறந்தவன் என்றாலும்
இன்றும் சிரிப்பை
வாடகைக்கே வைத்துருக்கிறேன்.

எங்கோ பிறேந்தேன்
எங்கோ வாழ்கிறேன்...
எத்தனையோ உறவுகள்
எத்தனையோ பிரிவுகள்...
பல நூறு தோல்விகள்
ஒரு சில வெற்றிகள்...

ஏன் பிறந்தேன்?

எதற்காய் வாழ்கிறேன்?

எங்கே செல்கிறேன்?

பதில்களை தேடி - என்

வாழ்க்கைப் பயணம்

தொடர்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக