புதன், 21 மார்ச், 2012

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஓர் ஆட்கொல்லி சாலை?


கடந்த 18.03.2012 அன்று எனது உறவினர் ஒருவர் ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய சில மணி நேரங்களின் பின்னர் கடுமையான வயிற்று வழியால் அவதி பட்டார். அன்று நல்லிரவையும் தாண்டிய நிலையில் அவரை சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதித்தோம். ஒரு சரியான சிகிச்சை வழங்க படாமையால் அவர் வலி தாங்க முடியாமல் மிகவும் வேதனையுடன் அவதி பட்டு கொண்டிருந்தார்.

பின்னர் நாங்கள் அவரை அவ்வைத்தியசாலையில் இருந்து விலக்கி கொண்டு அவரை கல்முனையில் உள்ள தனியார் வைத்திய சாலை ஒன்றில் பெரேரா எனும் ஒரு வைத்திய ஆலோசகரிடம் காண்பித்தோம். அவர் இது அப்பெண்டிசயிட் எனவும் அண்மையில் உள்ள அவர் வேலை செய்யும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கும் படி ஆலோசனை வழங்கினார். அவரை அங்கு அழைத்து சென்று அனுமதித்தோம்.

வேதனையில் துடிக்கும் ஒரு நோயாளிக்கு உடனடியாக எந்த விதமான சிகிச்சையோ அல்லது அவர் இருப்பதற்கு ஓர் கட்டிலோ வழங்க படவில்லை. ஒரு சில மணி நேரங்களின் பின்னர் ஒரு உதவி வைத்தியர் வந்து பார்வையிட்டதன் பின்னர் அவருக்கு ஒரு கட்டில் வழங்கபட்டது அத்துடன் அந்த வைத்தியர் இரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதிக்க வேண்டும் எனவும் அன்றிரவே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதே நேரம் இரத்தம், சிறு நீர் பரிசோதனைகள் வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாது ஏனென்றால் அன்று வைத்தியாசலை ஊழியர் பணி நிறுத்தம் எனவும் குறிப்பிட்டார். முடிந்தால் வெளியில் செய்து கொண்டு வருமாறு கூறினார். எப்படியோ கல்முனையில் உள்ள ஓர் தனியார் பரிசோதனை கூடத்தில் உடனடியாக அந்த அறிக்கைகளை கொண்டு வந்து கொடுத்தோம்.

ஆனால் சத்திரசிகிச்சை அடுத்த நாள் 20.03.2012 பின்னேரம்தான் செய்யப்பட்டது. இருந்த போதிலும் அவருக்கு வலி குறைந்த பாடில்லை. ஊழியர்களிடம் கூறிய போது திருப்தியான பதில் எதுவும் கிடைக்கவும் இல்லை. சத்திர சிகிச்சையின் போது எடுத்த கல் எங்கே என்று வினவிய போது முழிக்கின்றனர். எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது.

வைத்திய சாலை நிர்வாகத்தில் உள்ள எங்களது உறவினர் ஒருவர் மூலமாக முகாமைதுவத்திடம் சென்று முறையிட்ட போது விசாரித்ததில் வெட்டி பார்த்தோம் கல் இருக்கவில்லை என்று எதோ ஆடையை வெட்டி தைப்பது போல் அலட்சியாமாக பதில் அளிக்கபட்டது. சந்தேகத்தின் பேரில்தான் வெட்டி பார்த்தோம் என்று சமாளிக்க முயற்சித்தனர்.

சரியான நோயை கண்டறிய பல்வேறு scanning, testing இருந்த போதும் உரிய முறையில் சிகிச்சை வழங்க படமால் கண்ட படி வெட்டி குத்தும் இந்த வைத்தியர்களின் அலட்சிய போக்கை எங்கே சென்று முறையிடுவது? அண்மைக் காலங்களில் வைத்தியர்களின் இவ்வாறான அலட்சிய போக்குகள் காரணமாக பல மரணங்களும் சம்பவிதுள்ளதாக அறிய கிடைக்கிறது.

இந்த வைத்திய சாலையில் வைத்தியர்களுக்கு மத்தியில் நான் பெரிய ஆளா, நீ பெரிய ஆளா என்ற போட்டி பொறாமைகள் மட்டும் அதிகரித்து காணப்படுகிறதே தவிர நோயாளிகளுக்கு சரியான முறையில் உரிய சிகிச்சைகள் உடனடியாக வழங்க படுவதில் பல்வேறு குறைபாடுகள் அதிகமாவே காணப்படுகின்றன.

இவ்வைத்திய சாலையில் இப்படியான எத்தனையோ முறைகேடான சிகிச்சைகள் மூடி மறைக்கப்டுகின்றன. இங்கு உங்கள் உறவுகளும் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருக்கலாம். இவ்வாறு கண்டபடி சத்திர சிகிச்சைகளோ வேறு சிகிச்சைகளோ வழங்க படுமுன்னர் சரியான நோயை கண்டு பிடித்துள்ளர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நிச்சயமாக நோய் கண்டறிய படாமல் வழங்க படும் சிகிச்சை ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உயிரை காப்பாற்றும் இந்த வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்றால் வைத்தியசாலை ஓர் ஆட்கொல்லி சாலையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தவறுகளுக்கு சட்டம் என்ன சொல்கிறது என்பது எனக்கு தெரியாது. மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. நீங்களும் உங்கள் உறவுகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.
மறைக்கப்படும் இப்படியான ஆபத்தான தவறுகளை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.

புதன், 8 டிசம்பர், 2010

திருமணம்....

கூட்டல் சிறந்ததா?
பெருக்கல் சிறந்ததா?
ஒரு நண்பனிடம் கேட்டேன்
சுருக்கென முன்னேற
பெருக்கலே சிறந்தது என்றான்
பெருமையோடு...

திருமணம் ஒரு
கூட்டலா  பெருக்கலா
நீண்ட நாள் சந்தேகம் எனக்கு

கூட்டலில்
கூடலை கூட்டி
எவ்விதத்திலும் பாதிக்காது

பெருக்கலில்
பெருகளை பெருக்கி
சிலவேளை பாதிக்கும்

பக்கத்தில் இருந்த சுப்பையா
விளக்கம் சொன்னான்
பெண்களை பூச்சியத்துக்கு
குறைவாகவே மதிப்பிட முடியும்

மறு பக்கத்தில் நின்ற ஜோன்
விளக்கி சொன்னான்
கேர்ல்ஸ் ஆ
நொட ஜஸ்ட் டேஞ்சரஸ்
ஈவ்ண் டெசிமல்ஸ்

கூட இருந்த சோமபால
சும்மா விட்டானா
கெஹெனு கியன்னே
நிக்கங் அந்திமாய்
பிந்துவ்ட அடுவமாய்

அவனவன்
அனுபவத்தை சொன்னானா
ஆத்திரத்தில் சொன்னானா
தெரியவில்லை

நக்கலாய் சிரிக்கும்
நீங்க என்னதான் சொல்லுறீங்க?

கடந்த மாசம்
கல்யாணம் முடித்த கமால்
கண்ணீர் விட்டு கொண்டிருந்தான்...

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஊஞ்சலாட வருவாயா..?

காணாத உன்னை நான்
கற்பனையால் அலங்கரித்து
காணுகிறேன் ஒரு கனவு
ஊஞ்சலில் உன்னை வைத்து...

அலுவலக மேசையில்
கணனிக்கு அருகில் - என்
கவனத்தை ஈர்க்கும் விதத்தில்
விழிகளை புதைத்து வைத்து...

இருக்கமாய் இருவரும்
உல்லாசமாய் ஊஞ்சலாட
காணுகிறேன் ஒரு கனவு
ஒர்னமென்ட் ஒன்றை பார்த்து...

திங்கள், 29 நவம்பர், 2010

சுயநலவாதி

தூக்கி பிடித்தால்தான்
தூரலிலிருந்தும் காப்பான் உன்னை
குடை

ஞாயிறு, 28 நவம்பர், 2010

நவீனம்

பல்லாங்குழி, பம்பரம், கிட்டுப் பொல்
அகராதியில் மட்டும்
கூகுளில் கேம் தேடும் சிட்டுகள்
கனனியுக சிறுவர்கள்.

திங்கள், 8 நவம்பர், 2010

இளமையின் விளிம்பில்....

பிடித்து பார்க்கும் பிரளயத்தில் - விரல்கள்
கடித்து சுவைக்கும் களிப்பில் - உதடுகள்
பஞ்சணையை வேண்டி தவிக்கும் - நெஞ்சம்
முறுக்கு போட முரண்டு நிற்கும் - கால்கள்
அனைத்தையும் அடக்கி போடும் - மனது
போர்வைக்குள் உறங்கி போகின்றன 
உதய நேரத்து உணர்ச்சிகளை போல...

பாத்ரூம் வந்தனங்கள்
பெட்ரூம் வெறித்தனங்கள்
பார்க்கின் ஸ்பரிசங்கள்
தியேட்டரின் சில்மிசங்கள்
கனவுகளாய் கழியும் நிமிடங்கள்
சோர்விழந்து கிடக்கின்றன
சோற்றுக்கு வழி இல்லாதவனை போல...

இளைஞ்சர்களே..!
இளமையின் விளிம்பில்
இன்னும் எத்தனை வருடங்கள்..?

ஞாயிறு, 7 நவம்பர், 2010

எதிர் (பார்ப்பு) மாற்றம்

வருடமொன்று வசந்தமாய் கழிந்தது
வார்த்தையொன்று பொய்யானதால் - நான்
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தது
போலிருந்தது - ஆனால் போலி