செவ்வாய், 9 ஜூன், 2009

யாருக்காக?

அவளை அளவுக்கு மீறி
நேசித்தது உண்மைதான்
ஆனால் அது அவளுக்காக அல்ல

சுற்றி இருந்த உறவுகளின்
சுக்கு நூறாய் போன கனவுகள்
என்றோ ஒரு நாள்
நிஜமாக்கப் படவேண்டும்

கடந்த காலங்களில்
இழந்து போன
அவள் பெற்றோரின்
ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
தீர்க்கப் படவேண்டும்

ஆம்...
அவளை நேசித்தது கொள்ளை
ஆனால் அவள்தான்
புரிந்து கொள்ளவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக