இலங்கையின் ஸாஹிராக்களில்
விளங்கிடும் ஒரு நாமம்
கல்முனை ஸாஹிராவென
காற் எண்திசையும்
போற்றிடுமே!
தேசிய சாலைகளில்
தேன் சிந்தும்
இக்கலா சாலை
சாதனைகளால் சரித்திரம் தொடுத்த
பூமாலை
இம்மாலை கொண்ட கழுத்து
எம் மனம் கவர்ந்தவர் - என்றும்
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய
அதிபர் பீர் முஹம்மத் எனும்
பொன்னெழுத்து
தங்க விழாவுக்கு
தயாராகிவிட்ட
தாயிவள் தலையதற்கு
முடி சூட வந்த
முடி சூடா மன்னர் இவர்
துடுப்பு தடுமாறும்
துயர நிகழ்வை போக்கி
உயர்வில் ஒரு துளி
சிந்த விட சித்தம் கொள்ளாத
சிறந்ததொரு படகோட்டி
ஆளுமையும், சொல் திறனும்
உழைப்பும், உற்சாகமும்
திறனும், தரமும்
ஒருங்கமைந்த ஓருருவம்
எங்களினிய அதிபரே!
வாழ்த்துகிறோம் கவி பாடி
வாஞ்சையுடன் உன்னை நாடி
இக்கல்லூரி மாணவர்களின்
மனங்களிலிருந்து சேகரித்த
வாழ்த்து பொட்டலத்தை
வார்த்தைகளாய் விரிக்கிறோம்
விஞ்ஞானப் பிரிவு மாணவர் மஜ்லிஸ்
பகுதித் தலைவர், ஆசிரியர்கள்
மாணவர்கள் சார்பாக
உளமார வாழ்த்துகிறோம்
கல்லூரியின் வளர்ச்சிக்காய்
கருத்தரிக்கும் உங்கள் முயற்சிகளுக்கு
அகிலக்கோன் துணை நிற்க
அனைவரும் பிரார்த்திக்கிறோம்
பின்குறிப்பு:
ஸாஹிரா கல்லூரியின் புதிய அதிபராக எ. பீர் முஹம்மத் அவர்கள் பதவி ஏற்றபோது 2000 பிரிவு மாணவர்களால் சயன்ஸ் நைட் நிகழ்வின் போது வழங்கப்பட்ட வாழ்த்துப் பா.
விளங்கிடும் ஒரு நாமம்
கல்முனை ஸாஹிராவென
காற் எண்திசையும்
போற்றிடுமே!
தேசிய சாலைகளில்
தேன் சிந்தும்
இக்கலா சாலை
சாதனைகளால் சரித்திரம் தொடுத்த
பூமாலை
இம்மாலை கொண்ட கழுத்து
எம் மனம் கவர்ந்தவர் - என்றும்
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய
அதிபர் பீர் முஹம்மத் எனும்
பொன்னெழுத்து
தங்க விழாவுக்கு
தயாராகிவிட்ட
தாயிவள் தலையதற்கு
முடி சூட வந்த
முடி சூடா மன்னர் இவர்
துடுப்பு தடுமாறும்
துயர நிகழ்வை போக்கி
உயர்வில் ஒரு துளி
சிந்த விட சித்தம் கொள்ளாத
சிறந்ததொரு படகோட்டி
ஆளுமையும், சொல் திறனும்
உழைப்பும், உற்சாகமும்
திறனும், தரமும்
ஒருங்கமைந்த ஓருருவம்
எங்களினிய அதிபரே!
வாழ்த்துகிறோம் கவி பாடி
வாஞ்சையுடன் உன்னை நாடி
இக்கல்லூரி மாணவர்களின்
மனங்களிலிருந்து சேகரித்த
வாழ்த்து பொட்டலத்தை
வார்த்தைகளாய் விரிக்கிறோம்
விஞ்ஞானப் பிரிவு மாணவர் மஜ்லிஸ்
பகுதித் தலைவர், ஆசிரியர்கள்
மாணவர்கள் சார்பாக
உளமார வாழ்த்துகிறோம்
கல்லூரியின் வளர்ச்சிக்காய்
கருத்தரிக்கும் உங்கள் முயற்சிகளுக்கு
அகிலக்கோன் துணை நிற்க
அனைவரும் பிரார்த்திக்கிறோம்
பின்குறிப்பு:
ஸாஹிரா கல்லூரியின் புதிய அதிபராக எ. பீர் முஹம்மத் அவர்கள் பதவி ஏற்றபோது 2000 பிரிவு மாணவர்களால் சயன்ஸ் நைட் நிகழ்வின் போது வழங்கப்பட்ட வாழ்த்துப் பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக