தினம் - என்
இரு கண்ணிகளில்
சிக்கி கொள்ளும்
சின்ன புறாவே..!
நான்
சந்தோசப்படவில்லை
சில வினாடிகளிலேயே
நீ தப்பித்துக் கொள்வதால்
கால்களை கண்ணியில்
கழற்றி வைத்துவிட்டு அல்ல...
பாதையில் உந்தன்
பாதங்கள் பதிந்த
தசங்களை மட்டும் விட்டுவிட்டு...
நீ
பறந்து செல்கிறாய்
இந்த குரங்கை
கூண்டிலடைத்துவிட்டு
உன் நினைவை விட்டு
இறங்க முடியவில்லை
நீயாவது சற்று இரங்க கூடாதா?
நிலவை போல
முகத்தை காட்டாது
மின்னலை போல
மறைந்து கொள்கிறாயே
நிலவை பார்த்ததால்
சூரியனைக் காண முடியவில்லை
மின்னலைப் பார்த்ததால்
பௌர்ணமியை ரசிக்க முடியவில்லை
என் இதயத்தை
விரித்து தருகிறேன்
அதில் உன் பாதத்தை வை.
அப்போதாவது நான்
உன் பாரத்தை
அறிந்து கொள்ள கூடும்
உன்னை திருடிவிட்டேன்
அதனால் நீ
எனக்கே சொந்தமென்று
எந்த நீதி மன்றத்தில்
முறையிடுவது?
தினம் - என்
இரு கண்ணிகளில்
சிக்கி கொள்ளும்
சின்ன புறாவே..!
இப்பொழுது நீ
சிறகசைக்க சம்மதிக்கிறேன்
நீ இன்னும்
பூக்காத மலர் என்பதால்
பின் குறிப்பு:
ஒரு பருவமாகத சிறுமி தினமும் என் பார்வையில் சிக்கி என் மென் மனதை தொட்ட போது.
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக